சென்னையில் பள்ளி மாணவர்களை தாக்கி சீன் காட்டிய நடிகையை அலேக்கா தூக்கி சென்ற போலீஸ்

சென்னை குன்றத்தூர் பகுதியில் அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனாவை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

First Published Nov 4, 2023, 2:49 PM IST | Last Updated Nov 4, 2023, 2:49 PM IST

சென்னை குன்றத்தூர் பகுதியில் அரசுப் பேருந்து எப்பொழுதும் போல கூட்டமாக வந்த நிலையில், அதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் உள்ளே செல்ல இடம் இல்லாமல் படிக்கட்டுகளிலும், ஜன்னல் கம்பிகளை பற்றிக் கொண்டும் தொங்கிக் கொண்டு பயணம் செய்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த நடிகை ரஞ்சனா பேருந்தை வழி மறித்து பேருந்தின் ஓட்டுநர், நடத்துனரை கடுமையாக திட்டினார். மேலும் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கீழே இறங்குமார் மிரட்டினார். கீழே இறங்காத மாணவர்களை ரஞ்சனா ஆவேசமாக தாக்கினார். அப்போது அவரை எதிர்த்து கேள்வி கேட்ட நபர்களிடம் நான் ஒரு காவல் அதிகாரி என்று கூறி மீண்டும் தாக்கத் தொடங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், கெருகம்பாக்கம் பகுதியில் உள்ள ரஞ்சனாவின் வீட்டிற்குச் சென்ற காவல் துறையினர் அவரை கைது செய்தனர். கைது செய்து வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது தனது காரில் தான் வருவேன் என அடம்பிடித்தார். பின்னர் நீண்ட வாக்குவாதத்திற்கு பின் அவர் காவல்துறை வாகனத்தில் ஏறிச் சென்றார்.

Video Top Stories