நல்ல நடிகர் மட்லுமல்ல; நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் - கண் கலங்கிய நடிகர் செந்தில்

கேப்டன் விஜயகாந்த் நல்ல நடிகர் மட்டுமல்ல பழகுவதற்கு பண்பான நல்ல மனிதரும் கூட என நடிகர் செந்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Share this Video

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு பிரலபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரில் வரமுடியாத நபர்கள் தங்களது இரங்களையும், உணர்வுகளையும் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் செந்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் எந்த செய்தியை கேட்கக்கூடாது என்று இருந்தேனோ அந்த செய்தி இன்று காலை நான் கேட்க வேண்டியதாயிற்று.

கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார் என்ற செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவர் நல்ல நடிகர் மட்டுமல்ல பழகுவதற்கு நல்ல மனிதரும் கூட. அவர் படம் என்றாலே தொழில்நுட்ப கலைஞர்கள் மகிழ்ச்சியடைந்துவிடுவர் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Related Video