சென்னையில் பயங்கரம்; தெருவில் நடந்து சென்ற சிறுமியை தாய் கண் முன்னே முட்டி பந்தாடிய மாடு; அதிர வைக்கும் வீடியோ

சென்னை அரும்பாக்கம் அருகே பள்ளி முடிந்து தாயுடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று ஆக்ரோஷமாக முட்டி காயப்படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

சென்னை அரும்பாக்கம் அடுத்த எம் எம் டி ஏ காலனி, இளங்கோ நகர் தெருவில் சாலையில் தனது தாயுடன் சிறுமி, அவரது சகோதரருடன் நடந்து சென்றபோது பின்பகுதியில் வந்து கொண்டிருந்த சிறுவன் பசுமாடை பயம் காட்டுவது போல் குரல் கொடுத்துள்ளான். இதனால் மிரண்டுபோன பசுமாடு பசு மாடு சிறுமியை தனது கொம்பால் முட்டி தூக்கி இரண்டு மாடுகளும் காலால் வைத்து நசுக்கி தாக்கியது. 

இந்த நிலையில் அதை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் தாயார் கூச்சலிட்டு கதறியபடி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் செங்கல் உள்ளிட்ட பொருட்களை எடுத்து அடித்து மாட்டை விரட்ட முயற்சித்தனர். ஆனால் சுமார் மூன்று நிமிடம் சிறுமியை விடாமல் மீண்டும் மீண்டும் முட்டியதால் சிறுமி பலத்த காயமடைந்தார். 

ஒரு வழியாக சிறுமியை மீட்டனர். இதனை அடுத்து சிறுமியை அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமிக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசுமாடு பள்ளி குழந்தையை வெறியோடு தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ வைரலாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை மேயர் ராதா கிருஷ்ணன், மாட்டினை அஜாக்கிரதையாக சாலையில் உலாவ விட்ட அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Video