Asianet News TamilAsianet News Tamil

விமான கழிவறையில் 4.5 கிலோ தங்கம்; சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகளின் அதிரடியால் மீட்பு

அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கரை கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை  அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அபுதாபியில் இருந்து வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். ஆனால் யாரிடமும் எதுவும் இல்லை. 

இந்த நிலையில் பன்னாட்டு விமானமாக வந்து விட்டு உள்நாட்டு விமானமாக செல்ல இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்திற்குள் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில் வயர்கள் செல்ல கூடிய அறை பகுதியை சோதனை செய்த போது அவற்றில் நம்பர் லாக்குடன் கருப்பு நிற டேப் சுற்றப்பட்ட சோப் வடிவில் ஒரு பொருள் இருந்தது. 

அவற்றை பிரித்து பார்த்த போது இரண்டரை கோடி மதிப்புள்ள நான்கரை கிலோ தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதை கடத்தி வந்தது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video Top Stories