சென்னையில் தாறுமாறாக ஓடிய கார்; ஏரோ நாட்டிகல் இஞ்சினியரின் போதைக்கு 2 அப்பாவிகள் பலி

சென்னையில் கஞ்சா போதையில் இயக்கப்பட்ட கார் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்படுத்திய நிலையில், விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Share this Video

ஏரோநாட்டிகல் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் ஆசிப். இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஆசிப் தனது நண்பர் ரமணா மற்றும் ஒரு பெண் தோழியுடன் மது, கஞ்சா அருந்திவிட்டு போதையில் கார் ஓட்டி வந்துள்ளார். சாலையில் தாறுமாறாக ஓடிய கார் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு ஆசிப்பின் நண்பரும், தோழியும் அப்பகுதியில் இருந்து சென்றுவிட்டனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video