Watch : உலகளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்! பங்கேற்பாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி!
உலகளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்கும் 3 வீரர்களுக்கு 7.5லட்சம் நிதியுதவி வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

ஜெர்மனியின் கொலோனில் ஜெர்மன் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் அடுத்த மாதம் 30.07.2023 முதல் 05.08.2023 வரை 8வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ள தமிழ்நாடு வீரர்களான செல்வராஜ் அழகப்பன் (புதுக்கோட்டை), கணேசன் கருப்பையா (மதுரை) மற்றும் மனோஜ் சிங்கராஜா (மதுரை) ஆகிய மூவருக்கும், நுழைவுக் கட்டணம், விமானச் கட்டணம், உள்ளூர் போக்குவரத்துக் கட்டணம், விசா செலவுகள் மற்றும் சீருடை செலவினம் ஆகியவற்றுக்கான தொகையாக தலா ரூ.2,49,200/- என மூவருக்கும் மொத்த தொகை ரூ.7,47,600/- க்கான காசோலையினை வழங்கப்பட்டது.
இதனை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த காசோலையை வழங்கினார்.