வெற்றி அவ்வளவு ஈசியாலாம் கிடைத்துவிடாது என்பதற்கு இந்த வீடியோவே சான்று..!
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்ததோடு, உலக சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை சிந்து பெற்றார்.
இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் அபாரமாக ஆடி, 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்ததோடு, உலக சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை சிந்து பெற்றார்.
ஒலிம்பிக், ஆசிய போட்டிகள், காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டு போட்டிகள் என அனைத்து வகையான போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார். 2016 ஒலிம்பிக்கில் இறுதி போட்டியில் தோற்று வெள்ளி பதக்கத்துடன் நாடு திரும்பினார். தங்கத்தை தவறவிட்டிருந்தாலும், ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை பி.வி.சிந்துதான்.
ஒலிம்பிக்கில் தவறவிட்டதை உலக சாம்பியன்ஷிப்பில் பிடித்துவிட்டார். உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றது சாதாரணமாக கிடைத்ததல்ல. அதற்கு பின்னர் கடும் உழைப்பு இருக்கிறது. தலைசிறந்து விளங்கும் எந்தவொரு விளையாட்டு வீரரின் சாதனைகளுக்கு பின்னும் கடும் உழைப்பு இருக்கும். பி.வி.சிந்துவுக்கும் அப்படித்தான். உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு முன் அதற்காக பி.வி.சிந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ தான் இது.