உலக ரசிகர்களின் இதயங்களில் குடியிருக்கும் நியூசிலாந்து கேப்டன்.. வில்லியம்சனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய இலங்கை ரசிகர்கள்.. நெகிழ்ச்சி வீடியோ
வில்லியம்சன் உலகம் முழுதும் தீவிரமான ரசிகர்களை கொண்டிருக்கிறார் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சமகால கிரிக்கெட்டின் ஜெண்டில்மேனாக திகழ்கிறார் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். நாடு என்ற பேதமெல்லாம் இல்லாமல், எல்லை கடந்து, உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் நேசிக்கப்படும் வீரர்களில் ஒருவர் வில்லியம்சன்.
வில்லியம்சன், தனது அபாரமான மற்றும் சமயோசித கேப்டன்சியாலும், சிறந்த குணாதிசயங்களாலும் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். வில்லியம்சன் உலகம் முழுதும் தீவிரமான ரசிகர்களை கொண்டிருக்கிறார் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நியூசிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சி போட்டி நடந்தது. இந்த போட்டி தொடங்கிய நாளான ஆகஸ்ட் 8ம் தேதிதான் வில்லியம்சனின் பிறந்தநாள். இதையடுத்து வில்லியம்சனுக்காக இலங்கை ரசிகர்கள், மைதானத்திற்கு கேக் வாங்கிவந்தனர். ரசிகர்களின் அன்பிற்கு அடிபணிந்து, அவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் வில்லியம்சன்.வில்லியம்சனின் இந்த குணம் அவரது ரசிகர் பட்டாளத்தை மேலும் விரிவடைய செய்துள்ளது.