IPL 2025: CSK vs MI போட்டியில் ஹர்திக் பாண்ட்யா விளையாட தடை ஏன்?
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரசிகர்கள் பலம் கொண்ட இரு அணிகள் மோதுவது பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் 2024 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதற்காக ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.