Paris Olympics 2024: இன்னும் நிறைய பதக்கங்களை வெல்வோம்: வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் நம்பிக்கை!

இந்தியாவிற்காக துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் பதக்கம் வென்ற மனு பாக்கர் ஏசியாநெட் நியூஸ் நிறுவனத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார்.

Share this Video

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் 3ஆவது இடம் பிடித்து மனு பாக்கர் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். ஒலிம்பிக் 2024 தொடரில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்ற கொடுத்த வீர பெண்மணி என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் பக்கத்தில் மனு பாக்கருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் தான் ஏசியாநெட் நிறுவனத்திற்கு பிரத்யேகமாக மனு பாக்கர் பேட்டி கொடுத்தார். அதில், பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு பதக்கம் மட்டுமல்ல, இனி வரும் நாட்களில் பல பதக்கங்களை வெல்வோம் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.

Related Video