
IND vs AUS
India vs Australia: பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி நிறைவுப்பகுதியை நெருங்கி விட்டது. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் உள்ளன. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இன்று (மார்ச் 4) மோதுகின்றன. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கணிந்துள்ளது. இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் 3 காரணங்கள் குறித்து பார்க்கலாம்.