
IND vs PAK
'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று முன்தினம் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.