Asianet News TamilAsianet News Tamil

Watch : பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்! - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 28 ம் தேதி பழனி பெரியநாயகிஅம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்றுவருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளிதெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து வைகாசி விசாக தேரோட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருதேரில் வள்ளி,தெய்வானையுடன் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



தேரோட்டம் நிகழ்ச்சியில் எராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோசம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். முன்தாக வள்ளி,தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் இணை ஆணையர் (பொறுப்பு) பிரகாஷ் ,அறங்காவலர் குழுவினர் ,உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Video Top Stories