பல்லடத்தில் பாரம்பரிய முறையில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியில் அமைந்துள்ள உலகேஸ்வரர் திருகோவிலில் பாரம்பரிய முறைப்படி வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் பழமை வாய்ந்த உலகேஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகின்றது. அதனை தொடர்ந்து 28 வது நாள் மண்டல பூஜை நடைபெற்று வருகின்றது.அதனை முன்னிட்டு கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
வள்ளி முருகன் திருமண பாடல்களுடம் எந்த விதமான இசை கருவிகளும் இன்றி நாட்டுப்புற பாடல்களுடன் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.பாரம்பரிய உடையுடன் குழந்தைகள் பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கும்மியாட்டத்தில் கலந்து கொண்டனர்