கந்தர்வகோட்டை புனித செபஸ்தியார் ஆலய தை தேர் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கந்தர்வகோட்டை அடுத்த மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய திருத்தேர் விழாவில் ஜாதி, மத, பேதங்களை கடந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனூரில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்த புனித செபஸ்தியார் திருவுருவம் தாங்கிய தேரானது மேளதாள இசைகள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் முக்கிய வீதியின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று புனித செபஸ்தியாரை வழிபட்டுச் சென்றனர். மேலும் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஜாதி, மத, இன பாகுபாடு இன்றி ஏராளமானோர் பங்கேற்றனர்.