திருக்கார்த்திகை தீபத்திருவிழா; தங்க சூரிய பிரபை வாகனத்தில் அண்ணாமலையார் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் இரண்டாம் நாள் காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகர் மாடவீதியுலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்கி தரும் திருதலமாக விளங்குவது திருவண்ணாமலையாகும். இங்கு உள்ள புகழ் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோரும் திருக்காா்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப திருவிழா நேற்று காலையில் அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள 63 அடி உயர தங்ககொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் தொடங்கியது.
தொடந்து இரண்டாம் நாள் காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகரன் தங்க சூரிய பிரபை வாகனத்தில் அண்ணாமலையார் கோவிலின் முன்பாக எழுந்தளினர். தீபாரதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர் மற்றும் சந்திரசேகர் தங்க சூரிய பிரபை வாகனத்தில் மாடவீதியுலா நடைபெற்றது. ஆயிரக்காணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.