பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த திருவாரூர் தேர்; பொதுமக்கள் பரவசம்

உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து பரவசமடைந்தனர்.

First Published Apr 1, 2023, 12:35 PM IST | Last Updated Apr 1, 2023, 12:35 PM IST

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் ஆகும். சுமார் 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் ஆழித்தேர், திருவாரூர் நகர வீதிகளில் அசைந்தாடி வரும் அழகு காண்போரின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும். 

ஆழித்தேரை சீராக இயக்க திருச்சி பாய்லர் ஆலை நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஆழித்தேரின் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாக இருக்கும். திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.