திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

Share this Video

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரைப் பெருவிழா முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும் இந்த திருக்கோயில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது

இந்த நிகழ்வில் முக்கிய நிகழ்வாக திருத்தேர் நிகழ்வு இன்று நடைபெற்றது. மலைக்கோயில் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து திருக்கோயில் மாட வீதியை உலா வந்து பக்தர்களுக்கு முருகப்பெருமான் அருள் பாதித்தார். மங்கள இசை வாத்தியங்கள் கைலாய வாத்தியங்கள் முழங்க திருத்தேர் உலா நடைபெற்றது.

Related Video