சீரும், சிறப்புமாக நடைபெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி மாத திருக்கல்யாணம் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி உற்சவம் திருவீதி உலா காலையிலும், மாலையிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கல்யாண வெங்கட்ரமண சுவாமி மற்றும் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்னர் ஆலயத்தின் தலைமை சிவாச்சாரியார் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடைபெற்ற பிறகு, சுவாமிக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சிக்கு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திருமண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. பிறகு சுவாமிக்கு பால், பழம் கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சி, மொய் வைக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உள்ளிட்ட தெய்வங்களுக்கு தூப தீபங்கள் காட்டி, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, கற்பூரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.