திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்

திருத்தணி முருகன் கோயிலில் மாசி பெருவிழா முக்கிய நிகழ்வில் ஒன்றான வள்ளியம்மை திருமணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

First Published Feb 23, 2024, 10:24 AM IST | Last Updated Feb 23, 2024, 10:24 AM IST

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் மாசி பெருவிழா நிகழ்வு கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வின் முக்கிய தினமான ஒன்பதாவது நாள் இன்று மலைக்கோயில் வள்ளி மண்டபத்தில் திரளான பக்தர்கள் முன்னிலையில் ஊர்வலமாக அழித்துவரப்பட்ட உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மை தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர்.

Video Top Stories