சொர்க்கவாசல் திறப்பின் போது தலைகீழாக கவிழ்ந்த சுவாமி சிலை; அதிர்ச்சியில் பக்தர்கள்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெருமாள் கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது சுவாமி சிலை திடீரென தலைகீழாக கவிழ்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

First Published Dec 23, 2023, 4:01 PM IST | Last Updated Dec 23, 2023, 4:01 PM IST

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெரும்பாலான கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் படி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஆலேபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை பக்தர்கள் சுவாமி சிலையை தோளில் சுமந்தபடி கோவிலை சுற்றி வந்த போது திடீரென சுவாமி சிலை தலைகீழாக கவிழ்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

Video Top Stories