Watch : ஶ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்! அலை கடலென திரண்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ரெங்கா ரெங்கா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவ திருத்தணங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவிலின் சித்திரை விழாவிற்கான கொடியேற்றம் கடந்த 10ம்தேதி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முக்கிய விழாவான சித்திரை தேரோட்டம் இன்று காலை துவங்கியது. திருச்சி மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா ரெங்கா என கோஷமிட்டபடியே தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாநகர காவல்துறையின் சார்பில் சுமார் 800க்கும் மேற்பட்ட காவல் துறையினர், மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடும் வெயில் காரணமாக அப்பகுதி முழுவதும் பக்தர்களுக்கு குடிதண்ணீரை மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்கள் வழங்கி வருகின்றனர்.