கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு தேனி தேவராஜ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்

கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு தேனியில் பழமை வாய்ந்த ரத்தினாம்பிகை உடனுறை சமேத ஶ்ரீ தேவராஜா லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

First Published Dec 7, 2023, 7:43 PM IST | Last Updated Dec 7, 2023, 7:43 PM IST

தேனி மாவட்டம் தேனி சுக்குவாடன்பட்டியில் பழமை வாய்ந்த ஸ்ரீ ரத்தினாம்பிகை உடனுறை சமேத  தேவராஜ லிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்தத் திருக்கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஆலய வளாகத்தில் 108 சங்குகளை வைத்து பூஜைகள் செய்து வைத்திருந்தனர். பின்னர் மூலவர் லிங்கேஸ்வரருக்கு பால் தயிர் சந்தனம் மஞ்சள் விபூதி இளநீர் பழச்சாறு உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 108 சங்குகளை எடுத்துச் சென்று சிவபெருமானுக்கு சங்குகளால் அபிஷேகம் செய்து சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சிவபெருமானுக்கு வழிபாடு பாடல்களை பாடினர். பின்னர் சிவபெருமானுக்கு ஆபரணங்கள் கிரீடங்கள் அணிவித்து வண்ணமலர் மாலைகளால் வஸ்திரம் கட்டி சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தனர் அதேபோல் நடராஜப் பெருமானுக்கும் வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தார்.