புரட்டாசி முதல் சனி; தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்த பூதநாராயண பெருமாள்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை  மாட வீதியில் உள்ள ஶ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று மகா அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன.

First Published Sep 23, 2023, 3:33 PM IST | Last Updated Sep 23, 2023, 3:33 PM IST

திருவண்ணாமலை மாட வீதியில் குபேர மூலையில் வீற்றிருக்கும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ.பூத நாராயண பெருமாளுக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை சந்தனாதி தைலம், மஞ்சள், பச்சரிசி, மாவு, பால், இளநீர், எலுமிச்சைச்சாறு, சொர்ண அபிஷேகங்கள் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க பெருமாள் பாசுரங்கள் பாட பகவானுக்கு மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் குபேர வடிவிலான ஸ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை தினமான இன்று ஸ்ரீ.பூத நாராயணனின் அபிஷேகத்தையும் தீப ஆராதனையையும் ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் தரிசித்து சென்றார்கள்.

Video Top Stories