கரூரில் காசி விஸ்வநாதருக்கு 1008 கலசத்தை கொண்டு சிறப்பு அபிஷேகம்; திரளான பக்தர்கள் மனமுருகி வழிபாடு

கரூர் ஆண்டாள் கோயில் அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு மற்றும் கும்பாபிஷேக விழா நினைவு நாளை ஒட்டி 1008 கலசத்தால் மூலவர் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

First Published Jan 3, 2024, 7:30 PM IST | Last Updated Jan 3, 2024, 7:30 PM IST

மாவட்டம், ஆண்டாங் கோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி அம்மன் உடனாகிய ஸ்ரீ காசி விசுவநாதர் ஆலயத்தில் மார்கழி மாதத்தை முன்னிட்டும், ஆலய கும்பாபிஷேக நிறைவு நாளை முன்னிட்டும் 1008 கலச தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் முழுவதும் 1008 கலசத்தால் சிவலிங்க வடிவத்தில் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் அழகாக அடுக்கி வைத்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் பிரத்தேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர். அதன் தொடர்ச்சியாக மேளதாளங்கள் முழங்க ஆலய முழுவதும் இருந்த 1008 தீர்த்த கலசத்தை பக்தர்கள் கையில் ஏந்தியவாறு ஆலயம் வலம் வந்த பிறகு மூலவர் அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்பிகை உருவம் பதித்த பிரத்தியேக கலசத்தை சிவாசாரர்கள் தலையில் சுமந்தவாறு ஆலயம் பலம் வந்த பிறகு மூலவர் அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர், அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பிகைக்கு புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Video Top Stories