சனி பெயர்ச்சி; வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனிபகவானுக்கு நல்லெண்ணய், பால் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

First Published Dec 21, 2023, 1:35 PM IST | Last Updated Dec 21, 2023, 1:35 PM IST

வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர்  ஆலயத்தில் இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவினை அனுசரிக்கும் விதமாக இங்கும் சனிகிரக  பரிகார சாந்தி ஹோமம் நடந்தது. 

இதில் யாகத்தில் புனித நீரை வைத்து வேதமந்திரங்கள் முழங்க பட்டு வஸ்திரங்களை யாகத்தில் இட்டு பூர்னாஹதிக்கு பின்னர் ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு எள், எண்ணெய் (நல்லெண்ணய்) பால், தயிர், அரிசி மாவு, இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து மலர் மாலைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து சனிபகவானுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாராதனைகளும் நடந்தது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆலய வளாகத்தில் சனி பகவான் அருள் பெற வேண்டி திரளான ஆண்கள், பெண்களும், குழந்தைகளும் பரிகாரமாக எள் தீபங்களை ஏற்றி சனிபகவானை வழிபட்டனர்.

Video Top Stories