விநாயகர் கோவிலுக்கு 6 கிலோ தங்க பிஸ்கட்டுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்

ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே விநாயகர் கோவில் கதவுகளுக்கு தங்க முலாம் பூசுவதற்காக ரூ.5 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கிய பக்தர்கள்.

Share this Video

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் கிராமத்தில் சுயம்பு விநாயகர் கோவில் உள்ளது. சுயம்பு விநாயகர் கோவில் கருவறை வாயில் கதவுகளுக்கு பொன்முலாம் பூச முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேவையான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் ஆறு கிலோ தங்கத்தை ஆந்திராவைச் சேர்ந்த ஐக்கா ரவி, ஸ்ரீனிவாஷ் ஆகியோர் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

கோவில் கருவறை கதவுகளுக்கு பொன்முலாம் பூசப்பட்ட தகடுகளை பொறுத்த தங்க கட்டிகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்களுக்கு சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்த கோவில் நிர்வாகத்தினர் தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் வழங்கினர்.

Related Video