ரம்யமாக அலங்கரிக்கப்பட்ட ராமர் கோவில்.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி - கண்கவர் வீடியோ இதோ!

Ayodhya Ram Temple Videos : ராமர் கோவில் நாளை ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் பக்தர்கள் அயோத்தியில் குவிய துவங்கியுள்ளனர்.

Share this Video

நாளை அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி அவர்கள் நாளை காலை கோவிலை திறந்து வைக்கிறார். இதற்காக வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ச்சியாக அயோத்தியில் குவிந்து வருகின்றனர். வண்ண விளக்குகளால் அயோத்தி நகரமே ஒளிந்து வருகின்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

10 லட்சத்திற்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை அயோத்தி முழுவதும் ஏற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. வீடுகள் தோறும் ராம ஜோதி ஏற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல துறை சார்ந்த பிரபலங்களும் தற்போது அயோத்திக்கு சென்று வருகின்றனர். நாளை நடக்கவிருக்கும் கும்பாபிஷேக விழாவில் அனைவரும் பங்கேற்க உள்ளனர். 

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன்பதாக தமிழகத்தில் உள்ள பல புனித ஸ்தலங்களில் பிரதமர் மோடி அவர்கள் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் நாளை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Video