Watch : புரட்டாசி முதல் சனி! -பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு!

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு புதுச்சேரியில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமளை வழிபட்டனர்.
 

Share this Video

புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் பெருமாளை வேண்டிக்கொண்டு விரதம் இருப்பர். இந்த மாதத்தில் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடைபெறும். அந்த வகையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று புதுச்சேரி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தரகள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர். முன்னதாக கோயிலுக்கு வந்த பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

இதே போல் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video