வெகு விமர்சையாக நடைபெற்ற காந்திமதி அம்பாள் திருகல்யாணம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லையில் ஸ்ரீகாந்திமதி அம்பாள்  திருக்கல்யாண திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர். 
 

First Published Oct 23, 2022, 12:00 PM IST | Last Updated Oct 23, 2022, 12:00 PM IST

நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஐப்பசி திருகல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும். 10 நாட்கள் நடைபெறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் காந்திமதி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி , வீதி புறப்பாடு நடைபெற்றது. நேற்று பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

மேலும் படிக்க:Diwali 2022: தீபாவளி நாளில் விளக்கேற்றும் போதும், விளக்கேற்றிய பிறகும் கவனிக்க வேண்டியவை என்னென்ன..?

அதனைதொடர்ந்து  இன்று அதிகாலை 4.00  மணிக்கு காந்திமதி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.  பின்பு, சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்துக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்ட்னர். 

இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது. அதனை தொடா்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. 

மேலும் படிக்க:இந்த ஐப்பசி மாத அமாவாசை அன்று..இந்த ஒரு முடிச்சை நிலை வாசலில் கட்டி பாருங்கள்..தீராத துன்பம், வறுமை விலகும்.!