Asianet News TamilAsianet News Tamil

Watch : திருச்சி ஶ்ரீரங்கத்தில் நவராத்திரி கொலு : யானைகள் நடனம்!

நவராத்திரியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ரெங்கநாயகி தாயாருக்கு சாமரம்வீசியும், மவுத் ஆர்கன் இசைத்தும் ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் வழிபாடு நடத்தின. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வியப்புடன் கண்டு ரசித்தனர்.
 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் நவராத்திரி விழா நேற்று முதல் தொடங்கியது.

ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முதல் நாளான இன்று மாலை ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பிரகாரங்களில் வலம்வந்து கொலுமண்டபம் வந்தடைந்தார், அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மங்கள ஆரத்தி எனப்படும் தீபாராதனை நடைபெற்றது.

அதனையடுத்து விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ரெங்கநாயகி தாயார் சன்னதியில் இரவு ஸ்ரீரங்கத்து கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி நவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் தாயாருக்கு சாமரம் வீசியும், மவுத் ஆர்கன் வாசித்தும் வணங்கியது.

கோவில் யானைகளின் இத்தகைய வியத்தகு செயலை பெருந்திரளான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியப்புடன் கண்டுரசித்துச் சென்றனர்.

ஸ்ரீரங்கம் கோவிலில் நவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் அக்டோபர் 2-ம் தேதி நவராத்திரி 7ம் நாளில், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் செய்ய இயலும் தாயார் திருவடி சேவை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

Video Top Stories