Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
தமிழ் கடவுளான முருகனின் பெருமையை உலகில் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் (ஆக.24), நாளையும் (ஆக.25) நடைபெறுகிறது.
தமிழ் கடவுளான முருகனின் பெருமையை உலகில் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் (ஆக.24), நாளையும் (ஆக.25) நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து, மாநாடு நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் 100 அடி கம்பத்தில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தார். காலை 9 மணிக்கு மாநாட்டு கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.