பார்த்தசாரதி கோவிலில் சத்தமில்லாமல் 12000 பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை பார்த்தசாரதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் 12 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

First Published Oct 9, 2023, 6:38 PM IST | Last Updated Oct 9, 2023, 6:38 PM IST

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அண்மையில் சனாதனம் தொடர்பாக தெரிவித்த கருத்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர், உள்துறை அமைச்சர் உள்பட பலரும் உதயநிதியின் கருத்து தொடர்பாக பதில் அளித்திருந்தனர்.

இந்நிலையில், அவரது தொகுதிக்கு உட்பட்ட பார்த்தசாரதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் நாள் முழுவதும் சுமார் 12 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை அத்தொகுதி மக்களும், உதயநிதி ஆதரவாளர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர். 

Video Top Stories