சரணம் கோஷம் முழங்க இருமுடி கட்டி ஐயப்பனை வழிபட்ட அமைச்சர் சேகர்பாபு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இருமுடியுடன் 18ஆம் படி ஏறி சாமி தரிசனம் செய்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.

Share this Video

உலக புகழ் பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17ம் தேதி முதல் மண்டல காலம் தொடங்கி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜைக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

இதனால் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை சபரிமலைக்கு வந்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இருமுடியுடன் 18ஆம் படி ஏறி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து சன்னிதானத்தில் உள்ள மாளிகைபுரத்து அம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த அமைச்சருக்கு ஐயப்பன் விக்கிரகத்தில் பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Video