Asianet News TamilAsianet News Tamil

மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் ஆலயத்திற்கு புதிய தேர்; அமைச்சர்கள் தேரை இழுத்து தொடங்கி வைத்தனர்

திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள மாணிக்க விநாயகர் ஆலயத்திற்கான பிரத்யேகத் தேரினை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தனர்.

First Published Nov 23, 2023, 3:06 PM IST | Last Updated Nov 23, 2023, 3:06 PM IST

பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட 8 லட்ச ரூபாய் மதிப்பிலான, தேக்கு மரத்திலான தேரினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கு கொண்டு அதன் புறப்பாடினை உற்சவர்  மண்டபத்தில்  துவக்கி வைத்தனர். தேர் மாணிக்க விநாயகர் சன்னதியை சுற்றி வலம் வந்து மீண்டும் உற்சவர் மண்டபத்தில் நிலைநிறுத்தப்பட்டது.

முன்னதாக மாணிக்க விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பங்கு கொண்டனர். அப்போது அமைச்சர்கள் முன்னிலையில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலின் பெண் ஓதுவார் ரூபாவதி மாணிக்க விநாயகர் பாடலை பாடினார். உற்சவ காலங்களில் வேண்டும் பக்தர்கள் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி இத்தேரினை இருக்கலாம் என கோயிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.