Asianet News TamilAsianet News Tamil

மாசி பெருவிழா பிரமோற்சவம்; திருத்தணியில் அரோகரோ கோஷம் முழங்க கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் மாசி பெருவிழா பிரம்மோற்சவ நிகழ்ச்சி இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இந்நிகழ்வு 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த நாட்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் உற்சவர் முருகப்பெருமான் புலி வாகனம், யானை வாகனம், திருத்தேர் போன்ற வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனைத் தொடர்ந்து மாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளியம்மை திருக்கல்யாணம் பிப்ரவரி 22ம் தேதி வெள்ளிக்கிழமை மலைக்கோயில் பக்தர்கள் முன்னிலையில் அதிகாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Video Top Stories