Thaipoosam: மருதமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா: பக்தர்களுக்கு விதவிதமான அன்னதானம்

கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டப்படுகிறது.

First Published Feb 5, 2023, 2:09 PM IST | Last Updated Feb 5, 2023, 7:12 PM IST

கோவை மருதமலை முருகன் கோவிலில் சண்டை மேளங்கள் முழங்க, வான வேடிக்கை பட்டாசுகள் வெடித்து தைப்பூச திருவிழாவை பக்தர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

கோவை மருதமலையில் அமைந்துள்ள ஏழாம்படை வீடு என அழைக்கப்படும்  அருள்மிகு சுப்பிரமணிய திருக்கோவிலில் தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய தைப்பூச திருவிழாவின் முக்கிய நாளான இன்று 5ஆம் தேதி அதிகாலை முருகப்பெருமானுக்கு யாகசாலை பூஜை, அபிஷேகம் பூஜை, தீபாராதனை, ஆடு மயில் வாகனத்தில் திருவீதி உலா, குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற உள்ளது.

மேலும் அதிகாலை உதிக்கும் சூரியனை மலையில் நின்று பக்தர்கள்  வழிபடுவர். இதற்காக பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும், காவடி ஏந்தியும் பாத யாத்திரையாக முருகனை காண இரவில் மருதமலைக்கு வந்து குவிந்தனர்.

தை பூசத்தையொட்டி மருதமலை அடிவாரத்தில் அகில பாரத மக்கள் கட்சியினர் சண்ட மேளங்கள் முழங்க, வான வேடிக்கை, பட்டாசுகள் வெடித்து வரவேற்கின்றனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு விதவிதமான அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Video Top Stories