மதுரையில் மீனாட்சி அம்மன் சிலை மீது அமர்ந்து அம்மனை கொஞ்சி மகிழ்ந்த பச்சை கிளி; பக்தர்கள் பரவசம்

மதுரை ஜாங்கிட் நகர் பகுதியில் உள்ள கோவிலில் மீனாட்சி அம்மன் சிலையில் பச்சை கிளி அமர்ந்திருந்ததை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.

Share this Video

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள மீனாட்சி அம்மனின் கையில் பச்சை கிளி இருக்கும் இது மீனாட்சி அம்மனின் பெருமைகளில் ஒன்றாகும். பச்சைக்கிளி என்றாலே மீனாட்சி அம்மனின் கையில் இருக்கும் பச்சை கிளி தான் நினைவுக்கு வரும். 

அந்த வகையில் மதுரை மாநகர் ஜாங்கிட்நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர செல்வவிநாயகர் கோவிலில் உள்ள மீனாட்சியம்மன் சிலை மீது உண்மையான பச்சைக்கிளி ஒன்று இன்று அமர்ந்திருந்தது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் அபூர்வமாக ஆச்சரியத்துடன் கண்டுகளித்து அம்மனை தரிசனம் செய்தனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

Related Video