குலசை முத்தாரம்மன் தசரா திருவிழா; லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து சாமி தரிசனம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து அம்மனை வழிபட்டனர்.

Share this Video

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த கோவிலாக உள்ளது. இந்த கோவிலின் முக்கிய நிகழ்வாக 10 நாள் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக பக்தர்கள் 10 நாட்கள் விரதமிருந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி குறவன், குறத்தி, யாசகர், முருகன், விநாயகர், அனுமான் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து சுற்றுவட்டாரங்களில் யாசகம் பெறுவர்.

இவ்வாறு யாசகம் பெற்று முத்தாரம்மன் கோவிலில் 10ம் நாள் திருவிழாவின் போது கோவிலுக்கு வந்து காணிக்கையை செலுத்திவிட்டு தாங்கள் அணிந்திருந்த வேடத்தினை கடற்கரையில் கலைந்துவிட்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வினை காண்பர். இந்த நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர். 

Related Video