குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழா கோலாகலம்; பக்தர்கள் பரவசம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வேடமணிந்து கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
 

Share this Video

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தாங்கள் நினைக்கும் காரியம் கைகூட பக்தர்கள் காளி, அம்மன், சிவன், குறவன், குறத்தி வேடங்களை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடைபெற்றது. 

இந்நிலையில் இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துகொண்டு கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து இன்று இரவு 12 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

Related Video