தீபத்திருவிழா; தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலைக்கு கொண்டு செல்லும் பணி துவக்கம்

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி துவங்கப்பட்டது.

Share this Video

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழா நாளை (26ம் தேதி) நடைபெறுகிறது. நாளை அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பாக 4 மணியளவில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்பு உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மகா தீபம் ஏற்றப்படும் பஞ்ச லோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த 5 - 3/4 அடி உயரமுள்ள கொப்பறை திருக்கோயிலின் கிளி கோபுரம் அருகில் உள்ள நந்தி சிலை முன்பு சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொப்பறையை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் போது பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தியுடன் தீப கொப்பரையை சுமந்து சென்றனர்.

Related Video