திருச்செந்தூரில் 500 இளநீரை பல்லால் உரித்தும், தலையில் உடைத்தும் நூதன வழிபாடு
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் அரை மணி நேரத்தில் 500 இளநீரை பல்லால் உரித்து தலையில் உடைத்தது பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள ராமதூத யோக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபராதனை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இந்த வழிபாட்டின் போது கோவில் முன்பு குவித்து வைக்கப்பட்ட 500 இளநீகளை அருள் வந்த அனுமன் பக்தர்கள் தங்களின் பல்லால் உரித்து, தலையில் உடைத்து ஆஞ்சநேயர் போல் பாவனை செய்தனர். இதனையடுத்து உரித்த இளநீரை பக்தர்களுக்கு கொடுத்தனர் குழந்தை வரம் வேண்டி வந்த பெண்கள் மடிய ஏந்தி அந்த இளநீரை பெற்றுக் கொண்டனர். இந்த காட்சி அங்கிருந்த பக்தர்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.