Asianet News TamilAsianet News Tamil

அம்பாள் வீதியுலாவில் கொட்டி தீா்த்த கனமழை; 2 மணி நேரம் அம்மனுக்கு குடை பிடித்த அர்ச்சகர்

தூத்துக்குடியில் அம்மன் வீதியுலாவின் போது திடீரென மழை குறுக்கிட்டதால் சாமி வாகனத்தை பக்தர்கள் வீதியில் நிறுத்திச் சென்ற நிலையில், ஆர்ச்சகர் அம்மனுக்கு குடை பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த  மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு காலை, இரவுகளில் சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. அதன்படி நான்காவது நாள் விழாவான நேற்று இரவு  அம்பாள் வீதியுலா நடைபெற்றது. 

வீதி உலா தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கும் போது தீடீரென பலத்த மழை பெய்த காரணத்தினால்  அம்பாளை வீதி உலா அழைத்து வந்தவர்கள் நடுசாலையில் அம்பாளை வைத்து விட்டு மழைக்காக ஓரமாக ஒதுங்கி நின்றனர். இதனால் அம்பாள் மழையில் நனைந்து கொண்டு இருந்தார். 

அப்போது அவ்வழியாக வந்த கோவில் பூசாரி ஒருவர் தான் கொண்டு வந்த கொடையை கொண்டு அம்பாள் மழையில் நனையதவாறு பார்த்துக் கொண்டார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த போதும் பூசாரி கொடையை பிடித்தவாறு நின்று கொண்டு இருந்தார். பின்னர் மழை விட்ட பின்னர் மீண்டும் அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

கொட்டும் மழையில் அம்பாள் நனையாமல் இருக்க 2மணிநேரம் பூசாரி கொடை பிடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video Top Stories