Follow us on

  • liveTV
  • Watch : வடை மாலை அலங்காரத்தில் காட்சியளித்த நாமக்கல் ஆஞ்சநேயர்!

    Dinesh TG  | Published: Dec 23, 2022, 12:48 PM IST

    ஆஞ்சநேயர் ஜெயந்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அனுமன் கோவில்களில் இன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நாமக்கல்லில் இருக்கும் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவிலிலும் அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை இருக்கின்றது. ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று காலை 5 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஒரு லட்சத்து எட்டு வடைகளால் உருவாக்கப்பட்ட வடைமாலை ஆஞ்சநேயர் சிலைக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
     

    Read More

    Video Top Stories

    Must See