வந்தவாசி ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற கருட சேவை; பக்தர்கள் பரவசம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலில் தை மாதம் ரதசப்தமி முன்னிட்டு கருட சேவை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பாண்டுரங்கன் ராஜ அலங்கார தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைதொடர்ந்து மூலவர் பாண்டுரங்கனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கருட சேவை நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது. பின்னர் மங்கல மேள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது
இதையடுத்து ஸ்ரீ பாண்டுரங்கனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தனர். அப்போது பெண்கள் சிறப்பான முறையில் நடனம் ஆடிக்கொண்டு ஸ்ரீ பாண்டுரங்கனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த சிறப்புமிக்க ரதசப்தமி கருட சேவை நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பாண்டுரங்கனை தரிசனம் செய்து சென்றனர்.