ஆஹா என்ன ஒரு கண்கொள்ளா காட்சி! கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம்..!

குரோதியாண்டு பிறப்பையொட்டி கரூர் அண்ணா சாலை பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 1008 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

First Published Apr 14, 2024, 1:05 PM IST | Last Updated Apr 14, 2024, 1:12 PM IST

கரூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்ததை அடுத்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

குரோதியாண்டு பிறப்பையொட்டி கரூர் அண்ணா சாலை பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 1008 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து மூலவர் கர்ப்ப விநாயகர் தீர்த்த விநாயகர் பாலமுருகன் விஷ்ணு துர்க்கை நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு என்னைக்காப்பு சாற்றி பால் தயிர் பஞ்சாமிர்தம் தேன் இளநீர் எலுமிச்சைசாறு திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 அது தொடர்ந்து மூலவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் மாலை அணிவித்து பிறகு பக்தர்கள் வழங்கிய 1008 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால் மூலவர் கணபதி மற்றும் தீர்த்த விநாயகர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் காய்கறி மற்றும் பழங்கள் அலங்காரத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.