திருச்சி ரங்கநாதருக்கு மங்கள சீர்வரிசை கொண்டு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாகிகள்

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம்  ஸ்ரீநம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள், கிளிமாலை மற்றும் மங்கல பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது,

First Published Apr 18, 2023, 10:52 AM IST | Last Updated Apr 18, 2023, 10:53 AM IST

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம்  ஸ்ரீநம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் , கிளிமாலை மற்றும் மங்கல சீர்வரிசை பொருட்களை  ஸ்ரீவில்லிபுத்தூர் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள் ரமேஷ் பட்டர், சுதர்சன் பட்டர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கொண்டு வந்தனர். அவற்றை திருச்ச  ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்துவிடம் வழங்கினர்.

Video Top Stories