சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார்.

Share this Video

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்துவதற்காக தமிழக மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் காலையில் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலையில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள மூலவரை தரிசனம் செய்தார். 

இதன் பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் தங்க தேர் இழுத்து பவனி வந்த துர்கா ஸ்டாலின் தங்கத் தேரில் அமர்ந்திருந்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது துர்கா ஸ்டாலின் தீபாராதனை தொட்டு வணங்கினார். இந்நிகழ்வில் கோவில் இணை ஆணையர் கல்யாணி, கோவில் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Video