தீபாவளி திருநாள் - வேலூர் ஸ்ரீஜலகண்டீஸ்வரர் மற்றும் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

இன்று உலகெங்கிலும் தீபாவளி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பக்தர்கள் பலரும் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Share this Video

வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் இன்று தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் மற்றும் அகிலாண்டீஸ்வரி அம்மன் சிறப்பு அபிஷேலங்களை செய்து ஸ்ரீ ஜலகண்டீஸ்வரருக்கு தங்கக்கவசமும், அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு வெள்ளிக்கவசமும் அணிவித்து தீபாராதணைகள் நடந்தது. 

தீபாவளி திருநாளில் சர்வ அனுகிரகங்களையும் பெற நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று வேலூர் திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஆலயத்திலும் சிறப்பு அபிஷேகங்களை செய்து வெங்கடேச பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து தீபாராதனைகள் நடந்தது, திரளான பக்தர்கள் வரிசையில் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Video