காசிக்கு சென்று திரும்பிய தருமபுரம் ஆதீன மடாதிபதி.. மயிலாடுதுறையில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

Dharmapuram Adheenam : மயிலாடுதுறை அருகே தர்மபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார்.

First Published Mar 15, 2024, 9:52 PM IST | Last Updated Mar 15, 2024, 9:52 PM IST

கடந்த மாதம் காசிக்கு புனித யாத்திரை சென்று அங்குள்ள கட்டளை மடத்தில் தங்கி இருந்த மடாதிபதி சிவராத்திரி பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து புண்ணிய நதிகளில் நீராடிய பின்பு இன்று ஆதீன பூஜா மூர்த்தி சொக்கநாதர் உடன் ஞானரதத்தில் மயிலாடுதுறைக்கு எழுந்தருளினார். மயிலாடுதுறை கச்சேரி ரோடு நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து தர்மபுரம் ஆதீனத்திற்கு எழுந்தருளிய மடாதிபதிக்கு மடத்தின் நிர்வாகிகள் கட்டளை தம்புரான் சுவாமிகள் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஞான கொழு காட்சி நடைபெற்றது. மடாதிபதி காசியில் தங்கி இருந்த சமயத்தில் ஆபாச வீடியோ விவகாரம் எழுந்து அதன் தொடர்ச்சியாக நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மடாதிபதி ஆதீனத்திற்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.